உலக தாய்மொழி தினம் கொண்டாட்டம்

சி.ம.புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உலக தாய்மொழி தினம் கொண்டாட்டப்பட்டது.;

Update:2023-02-22 17:25 IST

சேத்துப்பட்டு

தேசூர் அருகே சி.ம.புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் உலக தாய்மொழி தினம் கொண்டாடப்பட்டது.

உலகில் உள்ள 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் தாய்மொழியாக, உலகின் மூத்த மொழியாக, அனைத்துலகத் தமிழர்களின் தாய்மொழியாக, உயர் தனி செம்மொழியாக விளங்குகின்ற தமிழ் மொழியின் தொன்மை சிறப்புகளையும், இலக்கண இலக்கிய வளங்கள் குறித்தும் மாணவர்களிடம் ஆசிரியர்கள் மூலம் எடுத்துரைக்கப்பட்டது.

ஓர் இனத்தின் வாழ்வாதாரத்தையும், பண்பாட்டையும், அடையாளத்தையும் நிலைநிறுத்தி கொள்ளவும், மேம்படுத்திக் கொள்ளவும் சிறந்த ஆயுதம் தாய்மொழி என்பதை மாணவ மாணவிகள் புரிந்து கொண்டனர்.

பின்னர், மாணவ-மாணவிகள் தமிழ் என்ற வடிவில் அமர்ந்து மகிழ்ச்சியையும், தமிழுக்கான மரியாதையையும் வெளிப்படுத்தினர். இதனை கண்டு கிராம மக்கள் மாணவர்களையும், ஆசிரியர்களையும் பாராட்டினர்.

இதற்கான ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர் நம்பெருமாள் மற்றும் உதவி ஆசிரியர்கள் சரவணன், பச்சையப்பன் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்