உலக தாய்ப்பால் வார விழா
தென்காசியில் உலக தாய்ப்பால் வார விழா நடைபெற்றது.
தென்காசி மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரியில் உலக தாய்ப்பால் வார விழா ஒரு வாரம் நடைபெற்றது. தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன. இதன் கடைசி நாள் நிகழ்ச்சி நேற்று முன்தினம் சுகாதார பணிகள் இணை இயக்குனர் டாக்டர் பிரேமலதா தலைமையில் நடைபெற்றது. குழந்தைகள் நல டாக்டரும் மீரான் மருத்துவமனை நிறுவனருமான அப்துல் அஜீஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். விழாவில் குழந்தைகள் நல டாக்டர் உமா கதிரேசன், தாய்ப்பாலின் அவசியத்தை விளக்கமாக பேசினார்.
விழாவில் மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ஜெஸ்லின், உறைவிட மருத்துவர் செல்வபாலா, டாக்டர்கள் ராஜேஷ், புனிதவதி, அன்னபேபி, முஸம்மில், லதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.