குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள்

குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடந்தன.

Update: 2023-08-04 20:30 GMT

தாமரைக்குளம்:

அரியலூர் குறுவட்ட அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான குடியரசு தினம் மற்றும் பாரதியார் தின விளையாட்டு போட்டிகள், மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நேற்று தொடங்கியது. இதில் 14, 17, 19 வயது மாணவ, மாணவிகளுக்கு கையுந்து பந்து, வளைகோல் பந்து, கைப்பந்து போட்டிகள் நடைபெற்றன. அரியலூர் குறுவட்ட அளவிலான 15 பள்ளிகளின் மாணவ, மாணவிகள் இந்த போட்டிகளில் கலந்து கொண்டனர். போட்டிகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி தொடங்கி வைத்தார். உடற்கல்வி ஆய்வாளர் தேகளீசன் தலைமையில் உடற்கல்வி ஆசிரியர்கள் நடுவராக பணியாற்றி போட்டிகளை நடத்தினர். போட்டிகளுக்கான ஏற்பாடுகளை அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி இயக்குனர் ரவி, உடற்கல்வி ஆசிரியர் ரமேஷ் ஆகியோர் செய்திருந்தனர். இதைத்தொடர்ந்து வருகிற 11-ந் தேதி சதுரங்க போட்டிகள் நடைபெற உள்ளன. குறுவட்ட போட்டிகளில் முதல் 3 இடங்களை பெறுபவர்கள் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்பார்கள். மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெறுபவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்பார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்