குறுவட்ட கபடி போட்டி
நிலக்கோட்டை தாலுகா அளவில் 19 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான குறுவட்ட கபடி போட்டி நடந்தது.;
நிலக்கோட்டை தாலுகா அளவில் 19 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான குறுவட்ட கபடி போட்டி, வத்தலக்குண்டு சி.எஸ்.ஐ. மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இந்த போட்டியை பள்ளி தலைமை ஆசிரியர் ஷீபா தொடங்கி வைத்தார். டைபிரேக்கர் முறையில் நடந்த இந்த போட்டியில், செக்கப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி முதல் இடத்தை பிடித்தது. வத்தலக்குண்டு சி.எஸ்.ஐ. மேல்நிலைப்பள்ளி அணி 2-வது இடத்தை கைப்பற்றியது.
இதேபோல் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் அணைப்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி அணி முதலிடத்தையும், 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் பள்ளப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அணி முதலிடத்தையும் கைப்பற்றியது. போட்டியில் வெற்றி பெற்ற அணிகள் மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றன.