சி.பா.ஆதித்தனார் பிறந்த நாள் விழா
பாவூா்சத்திரம் அருகே சி.பா.ஆதித்தனார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரம் அருகே உள்ள முத்துமாலைபுரத்தில் அமைந்துள்ள கு.ஆதிநாராயணன் ஆ.சந்திரலீலா நினைவு மாலை நேர இலவச படிப்பகத்தில் 'தமிழர் தந்தை' சி.பா.ஆதித்தனார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் கிராமப்புற மாணவர்களுக்கு இலவச மருத்துவ ஆலோசனைகள் மற்றும் நோய் தடுப்பு ஆலோசனைகளை டாக்டர் கந்தசாமி வழங்கினார். இதில் ஏராளமான கிராமப்புற மாணவ-மாணவிகள் பயனடைந்தனர். பின்னர் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை தோரணமலை முருகா பக்தர் குழு மற்றும் தோரணமலை கோவில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் ஆகியோர் செய்து இருந்தனர்.