காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு

காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது.

Update: 2022-12-31 18:14 GMT

திருச்சி மாவட்டம் ஜீயபுரத்திலிருந்து இலுப்பூர், அன்னவாசல் வழியாக காவிரி குடிநீர் புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு குழாய் மூலம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் அன்னவாசல் அருகே பெருஞ்சுனை விளக்கு ஆண்டிப்பட்டி குளம் வழியாக செல்லும் காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு 20 அடி உயரத்திற்கு தண்ணீர் பீறிட்டு வெளியாகியதால் பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகியது. இந்தக் குடிநீர் குழாய் உடைப்பால் புதுக்கோட்டை நகராட்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் தடைப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் குடிநீர் குழாய் உடைப்பை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஆய்வு செய்துள்ள நிலையில் பல அடி உயரத்திற்கு மேல் தண்ணீர் செல்வதால் தண்ணீரின் வேகம் குறைந்தால் மட்டுமே குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய முடியும். இந்த குடிநீர் குழாய் உடைப்பு தானாக ஏற்பட்டதை போல் தெரியவில்லை. யாரோ சிலர் வேண்டுமென்றே திட்டமிட்டு குடிநீர் குழாயை உடைத்து சேதப்படுத்தி உள்ளதாகவும் ஊழியர்கள் தெரிவித்தனர். மேலும் உடனடியாக இந்த குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்து தண்ணீர் வெளியாகி வருவதை நிறுத்தி குடிநீர் வினியோகத்தை சீராக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்