வீணாக கடலில் கலக்கும் காவிரி நீர் - விவசாயிகள் கவலை

கொள்ளிடம் ஆற்றில் 3-வது நாளாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

Update: 2024-08-04 02:32 GMT

சென்னை,

கர்நாடக மாநிலத்தில் பெய்த தொடர் கனமழையால் கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பின. இதையடுத்து அணைகளில் இருந்து உபரி நீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது. அதிகப்படியான நீர் வரத்து காரணமாக மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவை எட்டியது. பின்னர் அங்கிருந்து உபரி நீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது.

கடைமடை பகுதியான கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே வல்லம்படுகையில் பறந்து விரிந்த கொள்ளிடம் ஆற்றின் இருகரைகளையும் தொட்டபடி தொடர்ந்து 3-வது நாளாக இன்றும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. வினாடிக்கு 1.65 லட்சம் கன அடி நீர் வீணாக வங்கக்கடலில் கலக்கிறது.

அதிகப்படியான காவிரி நீர் கிடைத்தும் அதை சேமித்து வைக்காமல், வீணாக கடலில் கலப்பதை பார்க்கும்போது கவலை அளிப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மேலும் கொள்ளிடம் ஆறுகளில் தடுப்பணைகள் கட்டி தண்ணீரை சேமித்து வைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்