காவிரி நதிநீர் பிரச்சினையில் சட்டப்படி போராட வேண்டும்-திருநாவுக்கரசர் எம்.பி. பேட்டி

காவிரி நதிநீர் பிரச்சினையில் சட்டப்படி போராட வேண்டும் என்று திருநாவுக்கரசர் எம்.பி. தெரிவித்தார்.;

Update: 2023-08-29 19:07 GMT

திருச்சி மாநகராட்சி உறையூர் நடுநிலைப்பள்ளியில், திருநாவுக்கரசர் எம்.பி. மக்கள் குறைகேட்பு முகாம் நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:- திருச்சி மாநகராட்சியில் 65 வார்டுகளிலும் குறைகேட்பு முகாம் நடத்தி முடித்துள்ளோம். பொதுமக்களிடம் பெறப்பட்ட மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளோம். கடந்த தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளில் முக்கியமானவற்றை நிறைவேற்றிவிட்டோம். காவிரி நதிநீர் பிரச்சினையில் இரு கட்சிகள் பேசி தீர்வு காண முடியாது. சட்டப்படி போராடிதான் தீர்வு காண வேண்டும். காவிரி நதிநீரை தமிழகத்துக்கு பெறுவதில் தி.மு.க.வுடன் இணைந்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியும் போராட்டங்களில் பங்கெடுக்கும்.

காவிரி நீர் பங்கீடு தொடர்பான பிரச்சினை காலம் காலமாக இருந்து வருகிறது. அப்பிரச்சினை வரும் நாடாளுமன்ற தேர்தலில் எந்த விதத்திலும் பிரதிபலிக்காது. இந்தியா கூட்டணியை பார்த்து பா.ஜ.க.வுக்கு பயம் வந்துவிட்டது. அதனால் நாடாளுமன்ற தேர்தலை முன்கூட்டியே நடத்த திட்டமிட்டுள்ளனர். வரும் நாடாளுமன்ற தேர்தலில் கட்சியின் தலைமை வாய்ப்பு கொடுத்தால் போட்டியிடுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்