காவிரி பிரச்சினை: அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் -ராமதாஸ் வலியுறுத்தல்

காவிரி பிரச்சினை: அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்.

Update: 2023-09-13 20:48 GMT

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் கருகும் நிலையில் உள்ள குறுவைப் பயிர்களைக் காக்க வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று காவிரி நீர் ஒழுங்குமுறை குழு கர்நாடக அரசுக்கு ஆணையிட்டிருக்கிறது.

இந்த நீர் தமிழகத்திற்கு போதுமானதல்ல என்றாலும் கூட, அதைக் கூட தமிழகத்திற்கு திறந்து விட முடியாது என்று கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையாவும், துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாரும் அறிவித்துள்ளனர். கர்நாடக அரசின் இந்த நிலைப்பாடு கண்டிக்கத்தக்கது.

காவிரி நீரைப் பெறுவதற்காக தமிழக அரசு மிகவும் தீவிரமாக செயல்பட வேண்டிய தருணம் இதுவாகும். சட்ட நடவடிக்கையுடன் அரசியல் ரீதியிலான அழுத்தமும் கொடுப்பதன் மூலமாகவே காவிரி பாசன மாவட்டங்களின் விவசாயிகளுக்கு நீதியை பெற்றுத்தர முடியும்.

இது குறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டத்தை தமிழக அரசு உடனடியாக கூட்ட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்