கோபி லக்கம்பட்டி ஏ.ஆர்.எஸ். நகரை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 65.) ஓய்வு பெற்ற விவசாயத் துறை அதிகாரி. இவர் ஒரு நிகழ்ச்சிக்காக குடும்பத்துடன் வெளியே சென்று விட்டார். வீட்டின் முன்பாக காவலுக்கு நாயை கட்டி வைத்திருந்தார். இந்தநிலையில் நேற்று மாலை நாய் குரைக்கும் சத்தம் கேட்டது. இதனால் அக்கம் பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தபோது. ஒரு கோதுமை நாகப்பாம்பு படம் எடுத்தபடி ஆடியது.
உடனே கோபி தீயணைப்பு துறையினருக்கு இதுகுறித்து தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அங்கு வந்த நிலைய அலுவலர் முருகேசன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் கோதுமை நாகப்பாம்பை லாவகமாக பிடித்தனர். பின்னர் அதை ஒரு சாக்கு பையில் போட்டு அடர்ந்த காட்டு பகுதியில் விடுவதற்காக கொண்டு சென்றார்கள்.