குரங்குகள் கூண்டு வைத்து பிடிப்பு

ஆம்பூர் அருகே குரங்குகள் கூண்டு வைத்து பிடிக்கப்பட்டன.

Update: 2023-09-11 18:50 GMT

ஆம்பூரை அடுத்த தட்டல் அருகே பைரப்பள்ளி, துருகம் வனப்பகுதியில் ஊட்டல் தேவஸ்தான கோவில் உள்ளது. இங்கு சரஸ்வதி கோவில், நந்திதேவர் கோவில், விநாயகர், நவக்கிரகங்கள் உள்ளிட்ட சன்னதிகள் உள்ளன. இந்த கோவில்களுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். வனப்பகுதியில் கோவில்கள் அமைந்துள்ளதால் ஏராளமான குரங்குகள் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் குழந்தைகள் வைத்திருக்கும் தின்பண்டங்களையும் பக்தர்கள் கொண்டு வரும் தேங்காய், பழம் ஆகியவற்றையும் பறித்து செல்கின்றன. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அவதிக்கு உள்ளாகினர்.

பக்தர்களின் பாதுகாப்பை கோவில் நிர்வாகம் உறுதி செய்ய குரங்குகளை பிடிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து ஆம்பூர் வனத்துறையினர் உதவியுடன் கோவில் வளாகத்தில் சுற்றி வந்த குரங்குகளை பிடிக்க கோவில் நிர்வாகம் சார்பில் ஆங்காங்கே இரும்பு கூண்டுகள் வைக்கப்பட்டன. இதன் மூலம் 45-க்கும் மேற்பட்ட குரங்குகள் கூண்டுக்கு சிக்கின. பிடிபட்ட குரங்குகள் பேரணாம்பட்டு பகுதியில் இருந்து ஆந்திர மாநிலம் செல்லும் வி.கோட்டா சாலையில் கவுண்டன்யா வனவிலங்குகள் சரணாலய காப்புக்காட்டில் விடப்பட்டன. 

Tags:    

மேலும் செய்திகள்