அனுமந்தபுரம் முத்துமாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழா

அனுமந்தபுரம் முத்துமாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழா நடைபெற்றது.;

Update: 2022-07-07 14:45 GMT

விழுப்புரத்தை அடுத்த அனுமந்தபுரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சாகை வார்த்தல் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டுக்கான சாகை வார்த்தல் திருவிழா கடந்த 4-ந்தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அன்று விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து 5-ந் தேதி காலை 11 மணிக்கு பூங்கரக வீதியுலாவும் மற்றும் முத்துமாரியம்மன், கெங்கையம்மன் சாமிகளுக்கு சாகை வார்த்தல் நிகழ்ச்சியும் நடந்தது. இதையடுத்து அய்யனார் கோவிலில் ஊரணி பொங்கல் விழா நடந்தது. இதில் கிராம மக்கள் கலந்துகொண்டு பொங்கலிட்டு வழிபாடு செய்தனர். விழாவையொட்டி இரவில் விநாயகர், முத்துமாரியம்மன், அய்யனாரப்பன் வீதியுலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்