நரிக்குறவர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்கும் முகாம்

ஜோலார்பேட்டை அருகே நரிக்குறவர்ளுக்கு சாதி சான்றிதழ் வழங்கும் முகாம் நடைபெற்றது.

Update: 2023-06-14 18:36 GMT

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியம் பாச்சல் ஊராட்சி இதய நகரில் 30-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் இன குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று இதய நகர் பகுதியில் நரிக்குறவர் மக்களுக்கான பழங்குடியினர் சாதி சான்றிதழ் மற்றும் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டைகள், ஆதார் அட்டைகள் வழங்குவதற்கான சிறப்பு முகாமை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தொடங்கி வைத்தார். தேவராஜி எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.

இதில் ஒன்றியக்குழு தலைவர் எஸ்.சத்யா சதீஷ்குமார், மாவட்ட கவுன்சிலர் கவிதா தண்டபாணி, மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.கே.சதீஷ்குமார் உள்ளிட்ட வருவாய்த்துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்