பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் மது அருந்திய 2 வாலிபர்கள் கைது

கோபி அருகே பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் மது அருந்திய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்னா்.;

Update:2023-06-23 04:21 IST

கோபி அருகே உள்ள அளுக்குளி பகுதியில் கடத்தூர் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அதே பகுதியை சேர்ந்த மதன்குமார் (வயது 27) என்பவர் மது அருந்தியதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து மதன்குமாரை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் காசிபாளையம் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மது அருந்தியதாக பரணி (25) என்பவரையும் கடத்தூர் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்