கடன் தொல்லையால் முந்திரி வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை

பண்ருட்டி அருகே கடன் தொல்லையால் முந்திரி வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-06-17 18:18 GMT

பண்ருட்டி, 

பண்ருட்டி அருகே உள்ள நடுக்காட்டுபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ஞானவேல் (வயது 50). முந்திரி வியாபாரியான இவர் வியாபாரத்திற்காக ரூ.30 லட்சம் வரை தனக்கு தெரிந்தவர்களிடம் கடன் வாங்கியிருந்தார். வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் வாங்கிய கடனை அவரால் திருப்பி செலுத்த முடியவில்லை. மேலும் கடன் கொடுத்தவர்கள் அவரிடம் பணத்தை திரும்ப கேட்டு வந்தனர். இதனால் மனமுடைந்த ஞானவேல் நேற்று வீட்டின் அருகே உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் காடாம்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்