கொலையான ரவுடி உள்பட 3 பேர் மீது வழக்குகள் பதிவு

கல்லூரி மாணவர்களை மிரட்டி பணம் பறித்ததாக கொலை யான ரவுடி உள்பட 3 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.;

Update: 2023-05-11 19:45 GMT

கல்லூரி மாணவர்களை மிரட்டி பணம் பறித்ததாக கொலை யான ரவுடி உள்பட 3 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

ரவுடி கொலை

கோவை ஆவாரம்பாளையம் ரோடு பகுதியை சேர்ந்தவர் சத்திய பாண்டி (வயது34).

இவர் கடந்த மார்ச் மாதம் பாப்பநாயக்கன் பாளையம் பகுதியில் நடந்து சென்றபோது சிலர் ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டியும், துப்பாக்கியால் சுட்டும் கொலை செய்தனர்.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான சஞ்சய் ராஜா (36), சஞ்சய் குமார் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டனர்.

விசாரணையில் சத்திய பாண்டி மற்றும் சஞ்சய் ராஜா ஆகியோர் ரவுடி கும்பல் தலைவர்களாக செயல்பட்டதும், அவர்களுக்குள் இருந்த தகராறு காரணமாக அடிக்கடி மோதலில் ஈடுபட்டு வந்த னர்.

மேலும் அவர்கள், பீளமேடு பகுதியில் உள்ள கல்லூரி மாணவர் கள் சிலரை கஞ்சா, போதை மாத்திரை விற்பனை உள்ளிட்ட சமூக விரோத செயல்களுக்கு பயன்படுத்தி வந்ததாக தெரிகிறது.

கடத்தி பணம் பறிப்பு

சஞ்சய் ராஜாவிற்கு ஆதரவான கல்லூரி மாணவர் அஸ்வினை (20) என்பவரை சத்தியபாண்டி மற்றும் அவரது கூட்டாளிகள் 2 பேர் சேர்ந்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மோட்டார் சைக்கிளில் கொடிசியா பகுதிக்கு கடத்தி சென்றனர்.

பின்னர் அவரிடம் இருந்த ரூ.5 ஆயிரத்தை பறித்து விட்டு, சஞ்சய் ராஜாவிற்கு ஆதரவாக இருக்கக் கூடாது என மிரட்டி உள்ளனர்.

இதேபோல் பீளமேட்டில் விடுதியில் தங்கி படித்த திண்டுக்கல் வத்தலகுண்டு பகுதியை சேர்ந்த எபினேசர் ஜோஸ்வா (20) என்ப வரை சத்திய பாண்டி மற்றும் அவரது கூட்டாளிகள் 2 பேர் கடத்தினர். பின்னர் அவரை ஆயுதங்களை காட்டி மிரட்டி ரூ.43 ஆயிரத்தை பறித்தனர்.

வழக்கு பதிவு

இது குறித்த புகார்களின் பேரில் பீளமேடு போலீசார் தற்போது சத்தியபாண்டி மற்றும் அவரது கூட்டாளிகள் 2 பேர் மீது 2 வழக்குகளை பதிவு செய்தனர்.

சத்தியபாண்டி கொலை செய்யப்பட்ட பிறகு அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்