2 பேர் மீது வழக்குப்பதிவு
தொழிலாளி இறந்த வழக்கில் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.;
விருதுநகர் அருகே வலையப்பட்டி கிராமத்தில் தீப்பெட்டி ஆலையில் கழிவு பொருட்களை எரித்த போது கூத்திப்பாறையை சேர்ந்த முருகன் (வயது 55) என்ற தொழிலாளி தீயில் கருகி பரிதாபமாக இறந்தார். இதுபற்றி கோவில் வீரர்பட்டி கிராம நிர்வாக அதிகாரி ஷர்மிளா கொடுத்த புகாரின் பேரில் வச்சக்காரப்பட்டி போலீசார் தீப்பெட்டி ஆலையின் போர்மேன் சாத்தூரை சேர்ந்த கெண்டியார், சூப்பர்வைசர் திருவிருந்தாள்புரத்தை சேர்ந்த சுந்தரமகாலிங்கம் ஆகிய 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.