மணல் கடத்திய டிரைவர் உள்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு
மணல் கடத்திய டிரைவர் உள்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.;
ஜோலார்பேட்டை
மணல் கடத்திய டிரைவர் உள்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
நாட்டறம்பள்ளி தாசில்தார் க.குமார் தலைமையில் வருவாய்த்துறையினர் கனிம கடத்தலை தடுக்கும் வகையில் பச்சூர் பஞ்சாயத்து கவுண்டர் வட்டம் என்ற இடத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்திய போது லாரியை ரோட்டில் நிறுத்திவிட்டு டிரைவர் கீழே இறங்கி ஓட்டம்பிடித்தார். டிப்பர் லாரியில் சுமார் 4 யூனிட் மணல் இருந்தது.
வருவாய்த்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த டிப்பர் லாரி வெலக்கல்நத்தம் கிராமத்தை சேர்ந்த நவமணி என்பவருக்கு சொந்தமானது என்பதும் அதன் டிரைவலராக மேல்பச்சூர் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் இருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து மாற்று டிரைவர் மூலம் டிப்பர் லாரியை நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இது சம்பந்தமாக பச்சூர் கிராம நிர்வாக அலுவலர் விக்னேஷ் நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் டிபங்பர் லாரி உரிமையாளர் மற்றும் டிரைவர் மீது புகார் அளித்தார்.
அதன்பேரில் நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்- இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்