மாணவியை ரெயிலில் தள்ளி கொலை செய்த வழக்கு - குண்டர் சட்டத்திற்கு எதிராக கொலையாளி சதீஷ் மனுத்தாக்கல்
குண்டர் சட்டத்தில் கைது செய்ய பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து சதீஷ் தரப்பில் ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.;
சென்னை,
சென்னையை அடுத்த பரங்கிமலை ரெயில் நிலையத்தில் கடந்த அக்டோபர் 13-ந்தேதி சதீஷ் என்ற நபர் கல்லூரி மாணவி சத்யாவை ரெயில் முன் தள்ளி கொலை செய்தார். இந்த வழக்கை விசாரித்து வரும் சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் பரிந்துரையின் அடிப்படையில் சதீஷை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டார்.
இந்நிலையில் இந்த உத்தரவை எதிர்த்து கொலையாளி சதீஷ் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி, இது தொடர்பாக 8 வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.