பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த தம்பதி மீது வழக்குப்பதிவு

பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த தம்பதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.;

Update: 2022-06-04 18:31 GMT

குளித்தலை,

குளித்தலை அருகே உள்ள குப்பாச்சிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் வடிவேல்.இவரது மனைவி கோமதி (வயது 33). இவர்களது குடும்பத்திற்கும் அதே பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் என்பவரது குடும்பத்தினருக்கும் இடையே நிலப்பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று கோமதி வீட்டில் இருந்த போது அங்கு வந்த விஜயகுமாரின் மனைவி கனகவள்ளி கோமதியை திட்டியுள்ளார். இதுகுறித்து கேட்ட கோமதியை விஜயகுமார் மற்றும் கனகவள்ளி ஆகிய 2 பேரும் சேர்ந்து அவரை அடித்து, கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளனர். கோமதியின் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வருவதைப் பார்த்து அவர்கள் 2 பேரும் அங்கிருந்து ஓடிவிட்டனர். இதில் காயமடைந்த கோமதி குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த தகராறு குறித்து கோமதி அளித்த புகாரின் பேரில் விஜயகுமார் மற்றும் அவரது மனைவி கனகவள்ளி ஆகிய 2 பேர் மீது குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்