டாஸ்மாக் பார் சப்ளையரை தாக்கிய 2 பேர் மீது வழக்கு

டாஸ்மாக் பார் சப்ளையரை தாக்கிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.;

Update: 2023-05-25 19:12 GMT

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் பாண்டி(வயது 50). இவர் தற்போது ஆண்டாங்கோவில் புதூரில் வசித்து வருகிறார். இவர் ரெட்டிபாளையம் டாஸ்மாக் பாரில் சப்ளையராக வேலைபார்த்துக் கொண்டிருந்தபோது, கரூர் திருக்காம்புலியூரை சேர்ந்தவர் கவுதம், ஜீவா இருவரும் ரெட்டிபாளையம் டாஸ்மாக் பாருக்கு வந்து பாண்டியிடம் மது குடிக்க பணம் கேட்டுள்ளனர். அதற்கு பாண்டி பணம் இல்லை என கூறியுள்ளார். இதனையடுத்து கவுதம், ஜீவா ஆகியோர் பாண்டியை தகாத வார்த்தைகளால் திட்டி, அவரை தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த பாண்டி கரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பான புகாரின்பேரில் கவுதம், ஜீவா ஆகியோர் மீது கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்