பன்றிகளை விஷம் வைத்து கொன்ற பெண் மீது வழக்கு

பன்றிகளை விஷம் வைத்து கொன்ற பெண் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.;

Update:2023-02-08 00:06 IST

கோட்டைப்பட்டினம் அருகே கொடிக்குளம் புது தெருவை சேர்ந்தவர் சிவா மனைவி கார்த்திகா (வயது 28). இவர் அதே பகுதியில் பன்றிகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் இவரது பன்றிகள் அதே பகுதியை சேர்ந்த ஜெயந்தி (35) என்பவர் வயல் பகுதிக்கு சென்று சேதம் ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. பன்றிகளை வயலுக்கு வரவிடாமல் பார்த்துக்கொள்ளுமாறு பலமுறை கூறியும் அவர் கேட்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் இரு குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த வயல் பகுதியில் விஷம் கலந்த உணவுப் பொருட்களை வைத்ததாக கூறப்படுகிறது. விஷம் கலந்து வைக்கப்பட்ட உணவு பொருளை சாப்பிட்ட 6 பன்றிகள் நேற்று முன்தினம் செத்தன. இதுகுறித்து ஜெயந்தி மீது கோட்டைப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்