மருமகளுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு
பூர்வீக சொத்தை விற்க எதிர்ப்பு தெரிவித்த மருமகளுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.;
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள சூசையப்பர்பட்டிணம் தெற்கு தெருவை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. இவருடைய மனைவி ஆரோக்கிய ஷோபனா (வயது 29). இவர்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது. ஆரோக்கியசாமி வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்தநிலையில் ஆரோக்கிய ஷோபனாவின் மாமனாரான மரியபிரகாசம் பூர்வீக சொத்தை விற்க கூடாது என ஆரோக்கிய ஷோபனா ஜெயங்கொண்டம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மரியபிரகாசம், ஆரோக்கிய சோபனாவின் வீட்டில் இருந்த பொருட்களை சேதப்படுத்தியதோடு அவரை தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து ஆரோக்கிய ஷோபனா அளித்த புகாரின் பேரில் உடையார்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.