போக்சோ சட்டத்தில் ஆசிரியர் மீது வழக்கு

மயிலாடுதுறை அருகே போக்சோ சட்டத்தில் ஆசிரியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2023-09-23 18:45 GMT

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே அரசூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நடேசன் மகன் கோவிந்தராஜ். இவர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஒன்றில் ஆசிரியராக உள்ளார். கோவிந்தராஜ் பணியாற்றும் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்துவரும் 9 வயது சிறுமிகள் 3 பேரிடம் பாலியல் ரீதியாக துன்புறுத்தலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து அந்த சிறுமிகள் தங்களது பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி ஒருவரின் தாயார் மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகவள்ளி மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதனைத்தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீசார் ஆசிரியர் கோவிந்தராஜை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்