ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் மீது வழக்கு
பாளையங்கோட்டையில் ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்திற்கு கைப்பந்து விளையாட வந்த ஓய்வுபெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஞானசிகாமணி, அங்கு கைப்பந்து பயிற்சி பெற்றுக்கொண்டிருந்த மாணவர்களை தடுத்தும், அவர்களுக்கு பயிற்சி கொடுத்த கைப்பந்து பயிற்றுனர் அருள்போஸை அவதூறாக பேசியும் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட விளையாட்டு அலுவலர் கிருஷ்ணசக்கரவர்த்தி பாளையங்கோட்டை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் ஞானசிகாமணி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.