பெண்ணை தாக்கிய கணவர், மாமனார் மீது வழக்கு
போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு வந்த பெண்ணை தாக்கிய கணவர், மாமனார் மீது வழக்கு
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி எம்.ஆர்.என் நகரை சேர்ந்தவர் இந்துமதி(வயது 26). இவருக்கும் மேட்டூர் இந்திரா நகரை சேர்ந்த சதீஷ்குமார் என்பவருக்கும் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2½ மாதங்களாக கணவன், மனைவி இருவரும் பிரிந்து அவரவர் பெற்றோர் வீட்டில் வசித்து வருவதாக கூறப்படுகிறது.
சம்பவத்தன்று இந்துமதி அவரது தாய் ஜெயலட்சுமி ஆகிய இருவரும் விசாரணைக்காக கள்ளக்குறிச்சி மகளிர் போலீஸ் நிலையத்துக்கு வந்தனர். பின்னர் விசாரணை முடிந்து போலீஸ் நிலையத்திலிருந்து வெளியே வந்து கொண்டிருந்த அவர்களை அம்பேத்கர் சிலை அருகில் நின்ற சதீஷ்குமார், இவரது தந்தை குணசீலன் இருவரும் வழிமறித்து அசிங்கமாக திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து இந்துமதி கொடுத்த புகாரின் பேரில் சதீஷ்குமார், குணசீலன் ஆகிய 2 பேர் மீதும் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.