ரூ.1¼ லட்சம் மோசடி செய்த ஊழியர் மீது வழக்கு

ரூ.1¼ லட்சம் மோசடி செய்த ஊழியர் மீது வழக்கு;

Update: 2022-11-23 18:45 GMT


கோவை வேலாண்டிபாளையத்தை சேர்ந்தவர் பாரத் டோலியா (வயது 56). இவர் வேலாண்டிபாளையத்தில் தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார். இங்கு ஊழியராக நவீன்குமார் (45) என்பவர் வேலை செய்து வருகிறார்.


அவர் அந்த நிறுவனத்தில் ரூ.5 லட்சம் கடன் வாங்கி இருந்தார். அதில் ரூ.3¾ லட்சத்தை திரும்ப செலுத்தி விட்டார். மீதமுள்ள ரூ.1¼ லட்சத்தை திரும்ப செலுத்தாமல் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் சாய்பாபாகாலனி போலீசார் நவீன்குமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்