உளுந்தூர்பேட்டை அருகே பெண்ணை தாக்கிய தம்பதி மீது வழக்கு

உளுந்தூர்பேட்டை அருகே பெண்ணை தாக்கிய தம்பதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.;

Update: 2022-06-15 14:52 GMT

உளுந்தூர்பேட்டை, 

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள காம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் முருகவேல் மனைவி அம்பிகா (வயது 35). இவருக்கும் உடன்பிறந்த அக்காளான ருக்மணி (38) என்பவருக்கும் இடையே குப்பை கொட்டுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டு, முன்விரோதம் இருந்து வருகிறது. சம்பவத்தன்று குப்பை கொட்டுவது தொடர்பாக அம்பிகாவுக்கும், ருக்மணிக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த ருக்மணி, அவருடைய கணவர் கொளஞ்சி ஆகிய 2 பேரும் சேர்ந்து அம்பிகாவை ஆபாசமாக திட்டி, துடைப்பத்தால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அம்பிகா கொடுத்த புகாரின்பேரில் கொளஞ்சி, ருக்மணி ஆகியோர் மீது உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்