ஆயுதத்துடன் பிறந்தநாள் கொண்டாடியவர் மீது வழக்கு
ஆயுதத்துடன் பிறந்தநாள் கொண்டாடியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது;
மதுரை செல்லூர் மீனாம்பாள்புரம் பகுதியை சேர்ந்தவர் முத்துமணி (வயது 35). கட்சி பிரமுகரான இவர் தனது பிறந்தநாளை அங்குள்ள திருமண மண்டபத்தில் நண்பர்களுடன் கொண்டாடினார். அப்போது நண்பர்கள் அவருக்கு பெரிய கத்தி ஒன்றை பரிசாக கொடுத்தனர். அதை வைத்து அவர் இவரது பிறந்த நாளை நண்பர்களுடன் கொண்டாடியுள்ளார். மேலும் கேக்கை அந்த பெரிய கத்தியால் வெட்டினார். இதை செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ வைரல் ஆனதால் போலீசாருக்கு தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் முத்துமணி மீது செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.