சார்-பதிவாளர் உள்பட 8 பேர் மீது வழக்கு

சார்-பதிவாளர் உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Update: 2023-09-15 19:05 GMT

சிவகாசி, 

விருதுநகர் மாவட்டம் சிவகாசி உசேன் காலனியில் உள்ள பி.எஸ்.கே. நகரை சேர்ந்தவர் சொக்கலிங்கம் மனைவி தெய்வானை (வயது 52). இவர் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். கடந்த 2000-ம் ஆண்டு சிவகாசி அருகே உள்ள விஸ்வநத்தம் மகாராஜா நகரில் 2 பிளாட் வாங்கினார்.

சிவகாசி சார்-பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து அதற்கான பட்டாவை பெற்றுக்கொண்டார். இந்தநிலையில் 2022-ம் ஆண்டு அந்த நிலத்தை மகனின் படிப்பு செலவுக்கு பணம் தேவைப்பட்ட நிலையில் வங்கியில் அடமானம் வைக்க முடிவு செய்தார். இதற்காக வில்லங்க சான்று வாங்கிய போது போலி ஆவணம் மூலம் நிலத்தை விற்பனை செய்து இருப்பது தெரியவந்தது. இதற்கான பத்திரப்பதிவின் போது காளிமுத்து, ராமசாமி மகன் செந்தில்குமார் ஆகியோர் சாட்சி கையெழுத்து போட்டுள்ளனர். இதற்கு பத்திர எழுத்தர் வைரமுத்துவும், சார்-பதிவாளர் செந்தில்ராஜ்குமார் ஆகியோர் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது.

போலி ஆவணங்கள் தயாரித்து, நிலத்தை அபகரிக்க முயன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிவகாசி டவுன் போலீஸ் நிலையத்தில் தெய்வானை புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் சார்-பதிவாளர் செந்தில்ராஜ்குமார், பத்திர எழுத்தர் வைரமுத்து உள்ளிட்ட 8 பேர் மீது டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்