பெண்ணை தாக்கிய 7 பேர் மீது வழக்கு
பெண்ணை தாக்கிய 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இட்டமொழி:
வடக்கு விஜயநாராயணம் அருகே உள்ள பெரியநாடார் குடியிருப்பு வடக்குத்தெருவை சேர்ந்தவர் சாமி நாடார். இவரது மகன்கள் முருகன் (வயது 49), முத்துகிருஷ்ணன் (43), முத்துதுரை (45).
முத்துகிருஷ்ணனுக்கும், முருகன், முத்துதுரை ஆகியோருக்கும் இடையே இடப்பிரச்சினை இருந்து வருகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று முத்துகிருஷ்ணன் மனைவி ராஜேஸ்வரியிடம் (29) இடப்பிரச்சினை குறித்து முருகன், முத்துதுரை, முருகன் மனைவி ஜெயலட்சுமி (37), மகன் தினேஷ் (20), மகள் சுபி (21), இளையபெருமாள் மனைவி காசி (65), மகன் செல்லமுத்து (32) ஆகிய 7 பேரும் சேர்ந்து அவதூறாக பேசி கம்பால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த ராஜேஸ்வரி நாங்குநேரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் அளித்த புகாரின் பேரில் வடக்கு விஜயநாராயணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாககுமாரி, சப்-இன்ஸ்பெக்டர் அய்யப்பன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து 7 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.