சாலை மறியலில் ஈடுபட்ட 63 பேர் மீது வழக்கு

வந்தவாசியில் சாலை மறியலில் ஈடுபட்ட 63 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Update: 2023-05-10 16:43 GMT

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த சத்தியவாடி கிராம காட்டு காலனி பகுதியில் உள்ள சுமார் 3 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை ஒருவர் சொந்தம் கொண்டுவதை கண்டித்து வந்தவாசி வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து வந்தவாசி சென்னாவரம் கிராம நிர்வாக அலுவலர் தீர்த்தகிரி தெற்கு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் மறியலில் ஈடுபட்ட 63 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்