வில்லிசை கலைஞர்களை தாக்கிய 6 பேர் மீது வழக்கு

ஆலங்குளம் அருகே வில்லிசை கலைஞர்களை தாக்கிய 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Update: 2023-10-04 20:09 GMT

ஆலங்குளம்:

ஆலங்குளம் அருகே சிவலார்குளம் கிராமத்தில் உள்ள முப்பிடாதி அம்மன் கோவில் திருவிழா நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. அங்கு பண்பொழியைச் சேர்ந்த வில்லிசை கலைஞர்கள் மாரியம்மாள் (வயது 54), அவரது கணவர் முருகன் (57) மற்றும் இவர்களது மகன் சுப்புராஜ் (26) ஆகியோர் நிகழ்ச்சிக்காக வந்தனர். நிகழ்ச்சியை முடித்து விட்டு அங்குள்ள ஓட்டல் ஒன்றில் மூவரும் சாப்பிட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த சிவலார்குளம் நிறைகுளத்தான் மகன் சுபாஷ் (28) மற்றும் 5 பேர், அவர்களைத் தகாத வார்த்தைகளால் பேசி தாக்கினர். இதில் மூவரும் காயமடைந்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுபாஷ் உள்ளிட்ட 6 பேரை தேடி வருகின்றனர். காயமடைந்தவர்கள் ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்