மினிபஸ் கண்டக்டரை தாக்கிய 5 பேர் மீது வழக்கு

மினிபஸ் கண்டக்டரை தாக்கிய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது;

Update: 2023-04-21 21:56 GMT


உசிலம்பட்டியை சேர்ந்தவர் பாண்டி (வயது 32). இவர் மதுரையில் மினி பஸ் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் வேலை செய்யும் பஸ் கூடல்நகர் எஸ்.வி.பி. நகர் வழியாக சென்று கொண்டிருந்தது. அப்போது போதையில் 5 வாலிபர்கள் பஸ்சில் ஏறினர். அவர்கள் தள்ளாடியபடி ஏறியதால் அவர்களை பஸ்சிலிருந்து இறங்குமாறு கண்டக்டர் வலியுறுத்தி உள்ளார். அதில் ஆத்திரமடைந்த போதை ஆசாமிகள் அவரை ஆபாசமாக பேசி காலால் எட்டி உதைத்து சரமாரியாக தாக்கினர். பின்னர் பஸ்சில் இருந்து இறங்கி தப்பி விட்டனர். இந்த தாக்குதல் குறித்து கண்டக்டர் பாண்டி கூடல்புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கண்டக்டரை தாக்கிய போதை ஆசாமிகள் 5 பேரை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்