முன்விரோத தகராறு 4 பேர் மீது வழக்கு

ரிஷிவந்தியம் அருகே முன்விரோத தகராறு 4 பேர் மீது வழக்கு

Update: 2022-06-20 16:48 GMT

ரிஷிவந்தியம்

ரிஷிவந்தியம் ஒன்றியத்துக்குட்பட்ட கீழ்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன் மகன் பழனிவேல்(வயது 30). இவரது குடும்பத்துக்கும், உறவினர் சிவக்குமார் என்பவரின் குடும்பத்துக்கும் வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில் சம்பவத்தன்று சிவக்குமார் குடிபோதையில் பழனிவேல் வீட்டு வாசல் முன்பு நின்று ஆபாச வார்த்தைகளால் பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதை தட்டிக்கேட்ட பழனிவேலை சிவகுமார், இவரது மனைவி கஸ்தூரி, தொப்புளான், இவரது மனைவி அலமேலு ஆகியோர் ஆபாச வார்த்தைகளால் பேசி தாக்கியதாக தெரிகிறது. இது குறித்த புகாரின் பேரில் சிவகுமார், கஸ்தூரி உள்பட 4 பேர் மீதும் ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்