விழுப்புரத்தில்அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய 30 பேர் மீது வழக்கு
விழுப்புரத்தில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய 30 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே நேற்று முன்தினம் காலை ஆதிதிராவிட நலப்பள்ளிகளை பொதுக்கல்வித்துறையோடு இணைப்பதை கைவிடக்கோரி அனைத்துக்கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீஸ் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இந்நிலையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக பகுஜன் சமாஜ் கட்சி மத்திய மாவட்ட தலைவர் சிவபஞ்சவர்ணம், கடலூர் ஆதி அறக்கட்டளை நிறுவனர் திருமாறன் உள்ளிட்ட 30 பேர் மீது விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.