வாலிபரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு

வாலிபரை தாக்கிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Update: 2023-07-25 18:47 GMT

கரூர் மாவட்டம் தரகம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் ராகுல்காந்தி (வயது 31), கூலி தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கார்த்திக், ராஜா, செழியன் ஆகியோருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இந்தநிலையில் ராகுல்காந்தி தரகம்பட்டி பஸ் நிலையத்தில் நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த கார்த்திக், ராஜா, செழியன் ஆகியோர் ராகுல்காந்தியிடம் தகராறில் ஈடுபட்டு அவரை தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த ராகுல்காந்தி மைலம்பட்டி அரசு மருத்துவமனையில சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து ராகுல்காந்தி அளித்த புகாரின் பேரில் சிந்தாமணிப்பட்டி போலீசார் கார்த்திக், ராஜா, செழியன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்