முன்விரோத தகராறில் 3 பேர் மீது வழக்கு

விழுப்புரம் அருகே முன்விரோத தகராறில் 3 பேர் மீது வழக்கு;

Update: 2022-09-19 18:45 GMT

விழுப்புரம்

விழுப்புரம் அருகே தளவானூர் காலனியை சேர்ந்த ஜெகன் என்பவர், அவரது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை அதே பகுதியில் உள்ள தென்பெண்ணையாற்றின் ஓரமாக உள்ள சுடுகாட்டில் புதைப்பதற்காக அவரது உறவினர்கள் பள்ளம் தோண்டினர். அப்போது தளவானூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த வடமலை என்பவர், இது தண்ணீர் செல்லும் வழி என்பதால் வேறு இடத்தில் பள்ளம் தோண்டுமாறு கூறியுள்ளார். இதனால் அவர்களுக்கிடையே பிரச்சினை ஏற்பட்டது. இந்த முன்விரோதம் காரணமாக சுரேஷ், மன்சூர், மனோகர் ஆகியோர் சேர்ந்து வடமலையின் மகன் ராஜேஷ், அவரது தாய் விஜயா, உறவினர் சரவணன் மனைவி சரளா ஆகியோரை திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ராஜேஷ், விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சுரேஷ் உள்ளிட்ட 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்