பா.ஜனதாவினர் 25 பேர் மீது வழக்கு

பா.ஜனதாவினர் 25 பேர் மீது வழக்கு

Update: 2023-07-20 21:00 GMT

பொள்ளாச்சி

பொள்ளாச்சி நகராட்சி 10-வது வார்டு சுதர்சன் நகரில் உள்ள நுண் உரமாக்கல் மையத்தை வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என்று பா.ஜனதாவினர் நேற்று முன்தினம் சாலை மறியலில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

எனினும் சாலை மறியல் குறித்து மகாலிங்கபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கு இடையூறாக சாலை மறியலில் ஈடுபட்டதாக கூறி மகாலிங்கபுரம் போலீசார் பா.ஜனதாவினர் 25 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்