வங்கியில் போலி நகை அடகு வைத்த 12 பேர் மீது வழக்கு
சுரண்ைட அருகே வங்கியில் போலி நகை அடகு வைத்த 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.;
சுரண்டை:
சுரண்டையை அருகே வீரசிகாமணியில் தனியார் வங்கி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு கடந்த ஆண்டு வீர சிகாமணியை சேர்ந்த சிதம்பரம் (வயது 60), வடநத்தம்பட்டியை சேர்ந்த ராஜூ (50) ஆகியோர் சுமார் 75 பவுன் நகையை ரூ.17 லட்சத்திற்கு அடமானம் வைத்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவர்கள் ஒரு ஆண்டாக வட்டி கட்டாமலும், நகையையும் திருப்பாமலும் இருந்து வந்தனர். இதையடுத்து நகைகளை வங்கி நிர்வாகத்தினர் ஏலம் விட்டனர். அப்போது பொது ஏலத்தில் நகையை எடுத்தவர்கள் நகையை பரிசோதனை செய்தபோது தாமிர கம்பியில் செய்யப்பட்டு தங்கமுலாம் பூசப்பட்ட போலி நகை என்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து வங்கி நிர்வாகத்தினர் சேர்ந்தமரம் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் சிதம்பரம், ராஜூ, அவர்களுக்கு உடந்தையாக இருந்தவர்கள் உள்பட 12 பேர் மீது சேர்ந்தமரம் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.