கடலூர் முதுநகரில்பெண்ணை தாக்கிய 11 பேர் மீது வழக்கு
கடலூர் முதுநகரில் பெண்ணை தாக்கிய 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.;
கடலூர் முதுநகர்,
கடலூர் முதுநகர் அருகே உள்ள மணவெளியை சேர்ந்தவர் குமரன் மனைவி சுபா (வயது 20). இவர் விநாயகர் சிலை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரிடம் செல்லங்குப்பத்தை சேர்ந்த சங்கரதாஸ் என்பவர் விநாயகர் சிலை செய்வதற்கு முன் பணமாக ரூ.500 கொடுத்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் சங்கரதாஸ் தனது நண்பர்களுடன் விநாயகர் சிலை வாங்க சென்றுள்ளார். அப்போது மீதி ரூ.1500 பணத்தை கொடுக்காமல் சிலையை எடுத்ததாக கூறப்படுகிறது. இதில் சுபாவுக்கும், சங்கரதாஸ் தரப்பினருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த சங்கரதாஸ் மற்றும் அவரது நண்பர்கள் சுபாவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் சங்கரதாஸ் உள்பட 11 பேர் மீது கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.