முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்பட 1,000 பேர் மீது வழக்கு

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்பட 1,000 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-07-21 18:35 GMT

கரூர் வெங்கமேட்டில் நேற்று முன்தினம் விலைவாசி உயர்வை கண்டித்து மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் உயர் நீதிமன்ற நிபந்தனைகளை மீறி பொது வழியில் தடுப்புகள் அமைத்து இடையூறு ஏற்படுத்தியதாகவும், அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் கிராம நிர்வாக அதிகாரி சுரேஷ் வெங்கமேடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவைத்தலைவர் திருவிகா உள்பட அ.தி.மு.க.வை சேர்ந்த 1,000 பேர் மீது வெங்கமேடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்