பெண்ணிடம் 100 பவுன் வரதட்சணை கேட்டதாக கணவர் உள்பட 10 பேர் மீது வழக்கு

பெண்ணிடம் 100 பவுன் வரதட்சணை கேட்டதாக கணவர் உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.;

Update: 2023-02-16 20:44 GMT

மணப்பாறை:

மணப்பாறையை அடுத்த முத்தாழ்வார்பட்டி அருகே உள்ள சேத்துப்பட்டியைச் சேர்ந்தவர் முத்துலெட்சுமி(வயது 29). இவருக்கும், கீரணிப்பட்டியை சேர்ந்த ஜீவானந்தம்(35) என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இந்நிலையில் கணவர் மற்றும் அவரது மாமியார் சரஸ்வதி உள்ளிட்டோர் 100 பவுன் நகை மற்றும் ரூ.5 லட்சம் ஆகியவற்றை வரதட்சணையாக கேட்டு, தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக முத்துலெட்சுமி மணப்பாறை மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் ஜீவானந்தம், சரஸ்வதி உள்ளிட்ட 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்