பாலக்கோடு
பாலக்கோடு அருகே செங்கோடப்பட்டியை சேர்ந்த தர்மன் மகன் கார்த்திக் (வயது 24). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமிக்கும் திருமணம் நடந்தது.
இதுபற்றி வட்டார வளர்ச்சி விரிவாக்க அலுவலர் சசிகலா, குழந்தைகள் உதவி மையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் பாலக்கோடு போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் சிறுமியை திருமணம் செய்த கார்த்திக், கார்த்திக் தந்தை தர்மன், தாய் ராதா, சிறுமியின் தாய் கோவிந்தம்மாள் ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சிறுமியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.