பாப்பிரெட்டிப்பட்டி அருகேசிறுமிக்கு காதல் தொல்லை; வாலிபர் மீது போக்சோவில் வழக்கு

Update: 2023-04-15 19:00 GMT

பாப்பிரெட்டிப்பட்டி:

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். அந்த கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சேலம் மாவட்டம் கணவாய் புதூர் பகுதியை சேர்ந்த சந்தோஷ் குமார் (வயது 26) என்பவர் வந்தார். இவர் சிறுமியை காதலிப்பதாக கூறி வந்தார். இதனை மறுத்த சிறுமிக்கு தொடர்ந்து காதல் தொல்லை கொடுத்ததாகவும் தெரிகிறது. இதுகுறித்து அந்த சிறுமி தனது தாயிடம் கூறியுள்ளார். இதையடுத்து பெற்றோர் பொம்மிடி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் பொம்மிடி போலீசார் சந்தோஷ்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்