தர்மபுரி அருகே கோவிலில் திருட முயன்ற 2 பேர் சிக்கினர்

Update: 2023-02-28 18:45 GMT

தர்மபுரி:

தர்மபுரி அருகே உள்ள சோலைக்கொட்டாய் பகுதியில் சிவன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவில் இந்த கோவில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 2 பேர் உள்ளே நுழைந்து திருட முயன்றனர். அப்போது சத்தம் கேட்டு வந்த பொதுமக்கள் அவர்களை பிடித்து, போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். மதிகோன்பாளையம் போலீசார் விரைந்து சென்று, பிடிபட்டவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் நடுப்பட்டியை சேர்ந்த செந்தில் (வயது 42), சோலைக்கொட்டாயை சேர்ந்த முருகன் (31) என்பது தெரியவந்தது. அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்