தடையை மீறி எருதுவிடும் விழா நடத்திய 37 பேர் மீது வழக்கு
ராயக்கோட்டை அருகே தடையை மீறி எருதுவிடும் விழா நடத்திய 37 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து ௬ பேரை கைது செய்தனர்.;
ராயக்கோட்டை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி பல்வேறு இடங்களில் எருது விடும் விழா நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ராயக்கோட்டை அருகே உள்ள கொப்பகரை ஊராட்சி சொன்னேம்பட்டி கிராமத்தில் உரிய அனுமதியின்றி நேற்று முன்தினம் எருது விடும் விழா நடத்தியதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது கிராமமக்கள் அனுமதியின்றி எருது விடும் விழா நடத்தியது தெரியவந்தது. இதுதொடர்பாக விழாக்குழுவினர் 37 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து எருது விடும் விழா நடத்திய ஞானமூர்த்தி (வயது 26) சண்முகம் (33), முருகேசன் (29), மாதேஷ் (25), பசப்பா (35), முருகன் (40) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஊர்கவுண்டர் அன்பழகன் மற்றும் விழா குழுவினர் குள்ளன், பெருமாள், செல்வராஜ், விஸ்வநாதன், முனியப்பன், முத்தப்பன், மாரியப்பன், கோவிந்தசாமி, செவத்தான், திருமுருகன், முனியப்பன், குப்பன், கோவிந்தராஜ் உள்பட 31 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.