தர்மபுரியில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்; அ.தி.மு.க.வினர் 80 பேர் மீது வழக்கு

Update: 2022-10-20 18:45 GMT

தர்மபுரி:

தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக சென்னையில் தடையை மீறி போராட்டம் நடத்திய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். இதை கண்டித்து தர்மபுரியில் உள்ள மாவட்ட அ.தி.மு.க. அலுவலகம் முன்பு திரண்ட அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் உரிய அனுமதி இன்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக அ.தி.மு.க.வை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட 80 பேர் மீது தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்