நிலத்தகராறில் இருதரப்பினர் மோதல்; 7 பேர் மீது வழக்கு
போச்சம்பள்ளி அருகே நிலத்தகராறில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மத்தூர்:
போச்சம்பள்ளியை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (வயது 38). அதே பகுதியை சேர்ந்தவர் சரவணன் (57). உறவினர்கள். இவர்களுக்குள் நிலத்தகராறு இருந்து வந்தது. சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் இருதரப்பினரும் மோதி கொண்டனர். அது தொடர்பாக இருதரப்பினரும் போச்சம்பள்ளி போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார், இருதரப்பிலும் 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.