தர்மபுரியில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 29 பேர் மீது வழக்கு

தர்மபுரியில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 29 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.;

Update: 2022-06-23 16:18 GMT

தர்மபுரி:

தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் ரவீந்திரன், மாவட்ட செயலாளர் குமார், நகர செயலாளர் ஜோதிபாசு, நிர்வாகிகள் மல்லையன், மாதையன், கிரைசாமேரி உள்ளிட்டோர் கலந்து கொண்டு அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள். இந்த நிலையில் உரிய அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள 29 பேர் மீது தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்